Posts

13/FEB/2019 ராகு கேது பெயர்ச்சியின் மேஷம் ராசி பலன்கள்.......

Image
13பிப்ரவரி 2019அன்று நடை பெற்ற  ராகு கேது பெயர்ச்சி விரிவான தகவல்கள் மற்றும் பலன்களை பார்ப்போம்... ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பல...

ரதசப்தமி வழிபாடு (12/02/2019)

Image
    ரதசப்தமி வழிபாடு (12/09/2019) பாவம் விலகி செல்வம் தரும் வழிபாடு தை மாதம் தெற்குப் பாதையில் சூரியன் பயணிக்கிறார் ஆனால் ரத சப்தமி தினத்தன்று வடக்கு திசையில் திரும்பி பயணிக்கிறார் இந்த நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும் அந்நாளில் சூரியன் விசேஷமான ஒளிபரப்பாகும் அன்றைய தினத்தில் இவ்விரதத்தை கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும் வழிபடும் முறை வீட்டில் நீராடும் போது சிறிது அரிசி மஞ்சள் தலையில் வைத்துக்கொண்டு பின் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிட வேண்டும் என்நாளில் தொழில் தொடங்கிட பணி மிகவும் சிறப்பாக இருக்கும் இந்நாளில் தர்மம் செய்வதால் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் சூரியன் ஆத்மகாரகன் இவரை வணங்குவதால் உடல் மனம் ஆரோக்கியம் அடைவார் இன் நாளில் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம் இந்நாளில் சூரியனை வழிபடும்போது சூரியனை நோக்கி ஓம் நமோ ஆதித்யாய ஆயுள் ஆரோக்கிய புத்திர் பலம் தேஹிமே சதா ஓம் சூரிய தேவாய நமஹ

பலவகை பிள்ளையார் வைப்பதன் பலன்கள்???????

Image
மஞ்சள் பிள்ளையார் -  சகல சௌபாக்கியமும் கிடைக்கும் குங்குமத்தால் பிள்ளையார் - செவ்வாய் தோஷம் நீங்கும் புற்று மண்ணினால் பிள்ளையார் - நோய்கள் அகலும். விபூதியால் விநாயகர் - உஷ்ண நோய்கள் நீங்கும். சந்தனத்தால் பிள்ளையார் -புத்திரப்பேறு கிடைக்கும் சாணத்தால் பிள்ளையார் - சகல தோஷமும் விலகி  வீட்டில் சுப காரியம் நடைபெறும் வெண்ணெயில் பிள்ளையார் - கடன் தொல்லை நீங்கும்

மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள்......

Image
மார்கழி மாத முக்கிய விசேஷ தினங்கள்..... . மார்கழி1 (16 .12.18) ஞாயிறு முதல் 30 நாட்களும்   அதிகாலையில்பெருமாள் கோவில் சென்று தினசரி 30 பாசுரங்கள் படித்தால் வீட்டில் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும். மார்கழி 3 (18.12. 18 ) செவ்வாயன்று வைகுண்ட ஏகாதேசி அன்று பெருமாள் கோவில் சென்று பரமபதவாசல் கடந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். மார்கழி 21 (5 .1.19 ) ஜனவரி சனிக்கிழமையன்று ஹனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட சகல துன்பங்களும் நீங்கும் சர்வ அமாவாசை அன்று பித்ருக்களுக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளாகும். மார்கழி 27 (11 .1  19) வெள்ளிக்கிழமை கூடாரவல்லி ஆருத்ரா தரிசனம் அன்று அதிகாலை பெருமாள் கோவில் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று தொடங்கும் பாடலை இருமுறை பாட திருமணபாக்கியம் தொழிலில் வெற்றியும் ஏற்படும் என்று சிவன் கோயில் சென்று ஸ்ரீநடராஜரை வழிபட உகந்த நாளாகும். மார்கழி-30 (14. 1 .19) திங்கள்அன்று போகி பண்டிகை அன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை விலக்கி வீட்டை சுத்தம் செய்து முன்னோர்களை வழிபட உகந்த நாளா...

அனைத்து செல்வங்களையும் தந்து, பல பிரச்சனைகளை தீர்க்கும் தீபத்தின் வகைகள்...

Image
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில… சித்ர_தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள். மாலா_தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது. ஆகாச_தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும். ஜல_தீபம்: நதி நீரில் மிதக்க விடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும். நௌகா (படகு) தீபம்: கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா’ என்றால் `படகு’ எனப் பொருள். சர்வ_தீபம்: வீட்டின் அனைத்து பாகங் கள...

கல்யாணவரம் அளிக்கும் திருக்கோவில்!!!!

Image
  காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் . காஞ்சீபுரம் நகரத்தில் இருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜேந்திர பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் . இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருக்கோயிலின் கருவறையில் பிரம்மாண்டமான முறையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் காண்போரை பக்தி பரவசத்துடன் கவரும் சாந்த சொரூபியாக தாயர் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் இந்த திருக்கோவிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் மேலும் திருக்கோவில் சார்பினில் மண்டகப்படியும் நடைபெறும். திருக்கோயிலின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு கைலாச நாதரும் வடக்கு மூலையில் மேற்கு நோக்கி அமர்ந்து கைலாச நாதரும் பக்தர்களுக்கு காட்சி ...

எந்தத் திசையில் தலைவைத்துப் படுப்பது நல்லது?

Image
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.  தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும். பொதுவாக வடக்கிலே தலைவைத்துப் படுத்தால், வம்சம் விருத்தியடையாது என்பார்கள். ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால், வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும். தெற்கில் தலை வைப்பதும் அவ்வளவு நல்லதல்ல. கிழக்கு மற்றும் மேற்கு திசைகள் தான், தலைவைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்ற திசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும். காரணம் ராஜ கிரகமான சூரியன் உதிப்பது அந்த திசையில் தான்.