குரு கவசம் எதற்கு ????????

நவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.

வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே 


என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.

குருவே நீபார்த்தால் போதும்
கோடியாய் நன்மை சேரும்!
திருவருள் இணைந்தால் நாளும்
திருமணம் வந்து கூடும்!
பொருள்வளம் பெருகும் நாளும்
பொன்னான வாழ்வும் சேரும்!
அருள்தர வேண்டி உன்னை
அன்போடு துதிக் கின்றோமே!
என்று குரு கவசம் எடுத்துரைக்கின்றது.


மாலை கிடைக்க வேண்டுமானாலும், மழலை பிறக்க வேண்டுமானாலும் குரு பகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். 

Comments

Popular posts from this blog

அங்காளம்மன் காயத்ரி மந்திரம்.....