13/FEB/2019 ராகு கேது பெயர்ச்சியின் மேஷம் ராசி பலன்கள்.......

13பிப்ரவரி 2019அன்று நடை பெற்ற ராகு கேது பெயர்ச்சி விரிவான தகவல்கள் மற்றும் பலன்களை பார்ப்போம்... ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி 2019ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பல...