Posts

Showing posts from September, 2018

புன்னை நல்லூர் மாரியம்மன் பாட்டு........

Image
புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு உகந்த இந்த பாடலை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் . புன்னை நல்லூர் மாரியம்ம்மா புவிதனையே காருமம்மா தென்னை மரத் தோப்பிலம்மா தேடியவர்க் கருளுமம்மா வெள்ளைமனம் கொண்ட அம்மா பிள்ளை வரம் தாரும் அம்மா கள்ளமில்லாக் காளியம்மா உள்ளமெல்லாம் நீயே அம்மா கண்கண்ட தெய்வம் அம்மா கண்நோயைத் தீர்த்திடம்மா பெண் தெய்வம் நீயே அம்மா பேரின்பம் அளித்திடம்மா வேப்பிலையை அணிந்த அம்மா வெப்பு நோயை நீக்கிடம்மா காப்புதனை அணிந்த அம்மா கொப்புளங்கள் ஆற்றிடம்மா பாலாபிஷேகம் அம்மா பாசத்தினைக் கொடுத்திடம்மா காலார நடக்க வைத்தே காலனையே விரட்டிடம்மா ஆயிரம் பேர் கொண்ட அம்மா நோயினின்று காத்திடம்மா தாயினது பாசந்தன்னை சேய் எனக்கு அருளிடம்மா வேனில்கால வேளையம்மா (உந்தன்) மேனிதன்னில் வேர்க்குதம்மா இளநீரில் குளித்திடம்மா இன்னருளை ஈந்திடம்ம்மா தேனில் நன்கு குளித்திடம்மா வானின் மீது உலவிடம்மா வளமார வாழ்ந்திடம்மா வாயார வாழ்த்திடம்மா 
Image
திருமணம் கைக்கூட எளிய பரிகாரம்:- நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும். அது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

புரட்டாசி மாதம் அசைவம் தவிர்ப்பது ஏன்?

Image
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்றும், புரட்டாசி மாத சனிக்கிழமை தோறும் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதும் நம்மவர்களின் வழக்கம். மேலும் புரட்டாசி மாதங்களில் பெரும்பாலானவர்கள் அசைவத்தைத் தவிர்த்து விட்டு, சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். இதற்கு ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறிய விளக்கம் சொல்லப்படுகிறது. அதனை இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளில், 6-வது ராசியாக வருவது கன்னி ராசி. சூரியன் ஒவ்வொரு ராசியில் நுழைந்து வெளிவரும் கால அளவே மாதமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சூரியன் கன்னி ராசிக்குள் சஞ்சரிக்கும் காலம் புரட்டாசி மாதம் ஆகும். கன்னி ராசியின் அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். புதன் மகாவிஷ்ணுவின் சொருபம். எனவே தான் புரட்டாசி மாதத்தில், பெருமாளை வழிபடும் வழக்கம் வந்ததாக கூறப்படுகிறது. புதன் பகவான் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்றும், அந்த மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து துளசி நீரை பருக வேண்டும் என்று சாஸ்திரம் செல்கிறது. புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக...