அனைத்து செல்வங்களையும் தந்து, பல பிரச்சனைகளை தீர்க்கும் தீபத்தின் வகைகள்...
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCnbLDdjpu24LLR0mcInLmkOPkp320ksT0QqeWC-YSBlCgtBHZV2L-zqfMbxP06Tb8xRqGc-TEes1H2Zy3WqH6Hmb2uv_zTYxZNdT4-pRUlTbTq1w71ESYXBOQ9lJd0MZ0o2cJZZP9AGoc/s640/IMG_20181130_194355.jpg)
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில… சித்ர_தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள். மாலா_தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது. ஆகாச_தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படுவது, ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும். ஜல_தீபம்: நதி நீரில் மிதக்க விடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும். நௌகா (படகு) தீபம்: கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா’ என்றால் `படகு’ எனப் பொருள். சர்வ_தீபம்: வீட்டின் அனைத்து பாகங் கள...